பேண்தகு அபிவிருத்தி
![]() |
ஆரம்ப காலங்களில் உலகில் பொருளியளாளர்களால் அபிவிருத்தி என்று பேசப்பட்டு வந்த எண்ணக்கருவே 20ம் நூற்றாண்டளவில் பேண்தகு அபிவிருத்தி என்ற மேம்பட்ட பதத்தினால் அழைக்கப்பட்டது. நிலையான அபிவிருத்தி என்பதற்கு பல்வேறு அமைப்புக்களால் வரைவிலக்கணங்கள் வழங்கப்பட்டது. அவ்வகையில் 1987ம் ஆண்டு புரூண்லண்ட் ஆணைக்குழுவினால் எதிர்கால சந்ததியினர் தங்கள் நிகழ்கால சொந்த தேவைகளை பூர்த்தி செய்யூம் வகையிலான ஒரு முன்னேற்றம் என பேண்தகு அபிவிருத்தியை வரைவிலக்கணப்படுத்தியூள்ளது.
சூழல் அழிந்து விடுமோ என பல சூழலியளாளர்கள் உலகளாவிய ரீதியில் பல கருத்துக்களை முன்வைத்ததன் விளைவாக 1992ம் ஆண்டு றியோடி ஜெனிரோ மாநாட்டில் 178 நாடுகள் ஒன்றினைந்து பேண்தகு அபிவிருத்தி தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை நிகழ்ச்சி நிரல் 21ஐ நிறைவேற்றியது. அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையினால் பேண்தகு அபிவிருத்தியை ஏற்படுத்த கல்வியினால் மாத்திரமே அடைய முடியும் என அறிந்து பேண்தகு அபிவிருத்திக்கான கல்விக்குரிய பத்தாண்டாக 2005-2014 வரையான காலப்பகுதியை ஒதுக்கியது. அத்துடன் 2015ம் ஆண்டு millenium summit என்ற ஒரு முன்மொழிவின் ஊடாக வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்களை குறைத்தல் என்ற முன்மொழிவும் எடுக்கப்பட்டது.
அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையினால் 2015ம் ஆண்டு பேண்தகு அபிவிருத்தி தொடர்பாக 17 இலக்குகளை முன்வைத்தது.இவ்விலக்குகளை 2030இல் அடைந்து கொள்வது என்ற தீர்மானமும் எட்டப்பட்டது.இது நிகழ்ச்சி நிரல்2030 எனப்பட்டது.
1. வறுமை இன்மை
2. பசி இன்மை
3. சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வூ
4. தரமான கல்வி
5. பால் நிலை சமத்துவம்
6. தூய்மையான நீரும் சுகாதாரமும்
7. மலிவான மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி
8. தரமான பணிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி
9. தொழில்துறை புத்தாக்கம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்
10. ஏற்ற தாழ்வூகளை குறைத்தல்
11. நிலைபேறான சமூகங்கள் மற்றும் நகரங்கள்
12. பொறுப்புமிக்க நுகர்வு மற்றும் உற்பத்தியூம்
13. காலநிலை மாற்ற பாதிப்புக்களை குறைப்பதற்கான செயற்பாடுகள்
14. நீர் வாழ் உயிரிணங்கள்
15. புவி மேல் காணப்படும் வளங்கள்
16. சமாதான நீதியான சூழலும் உறுதியான நிறுவனங்களும்
17. நிலையான அபிவிருத்தி நோக்கங்களை அடைவதற்கான கூட்டமைப்புகள்
இவ்விலக்குகளை அடைந்து கொள்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களும் செயற்பாடுகளும் அரசு மட்டத்திலும் தனியார் துறையினாலும் செயற்படுத்தப்பட்டன. எனினும் கல்வியினால் அடைந்து கொள்வதே சிறந்த முறை என ஆராய்ந்து கல்வியின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டது.
நிலைபேறாண அபிவிருத்தி மூன்று தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
1. பொருளாதார நிலைபேறான அபிவிருத்தி
2. சமூக நிலைபேறான அபிவிருத்தி
3. சூழல் தொடர்பான நிலைபேறான அபிவிருத்தி என்பனவாகும்.
எனவே இவ்வாறான பேண்தகு அபிவிருத்தியை சமூக பொருளாதார கலாசார மூலதனம் என்பவற்றை கல்வியினால் அடையப்பெறும் முறையை நோக்குவோம்.

No comments