இலங்கையின் கல்வியயு ம் பொருளாதாரமும்

 





லங்கை தெற்காசியாவில் எழுத்தறிவு ரீதியாக 92% கொண்ட நாடு ஆகும். தெற்காசியாவிலேயே உயர் எழுத்தறிவவு மட்டத்தை உடைய நாடாகிய இலங்கையில் கல்வித்தரம் எத்தகையது என சிந்திக்க வேண்டிய நிலையே ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசு தனது மொத்த தேசிய உற்பத்தியில் 1.8% ஐயே கல்விக்காக ஒதுக்குகின்றது. இதனால் இலங்கையில் ஆராய்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் கூடியளவு ஒதுக்க முடியாத நிர்ப்பந்த நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கல்விக்கு ஒதுக்கிய வீதத்தை பின்வருமாரு குறிப்பிடலாம். 

இலங்கை மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக ஒதுக்கிய வீதம்

ஆண்டு வீதம்

2015 1.8

2016 1.8

2017 1.8

2018 1.9

2019 1.9

2020 1.6

2021 1.6

             ஆதாரம் இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை

இலங்கையின் பொருளாதாரம் தற்காலத்தில் வீழ்ச்சிப் போக்கையே நோக்கிச் செல்வதாக மத்திய வங்கி ஆண்டறிக்கைகள் குறிப்பிடுகின்றன. எனினும் உலகளாவிய ரீதியில் ஒரு நாட்டின் ஒட்டுமொத்த அபிவிருத்தியை அளவிடும் சுட்டெண்ணாக KEI வைத்துள்ளது.

இச்சுட்டெண் வரிசையில் இலங்கை1995ம் ஆண்டு4.25சுட்டெண்ணுடன் 87வது இடத்திலும் 2000ம்ஆண்டு 4 2007ம் ஆண்டு 81வது இடத்தில காணப்படுவதுடன KEI சுட்டெண் 4.03 ஆகவு ம் காணப்படுகின்றது. 2012இல் 3.63ஆகவு ம் காணப்படுகின்றது. இதிலிருந்து. கல்விக்காக செலவிடுவதனை முதலீடாக கருதும் நாடுகளே தமது மொத்தத் தேசிய உற்பத்தியில் கூடுதலான வீதத்தை ஒதுக்குகின்றன.

இலங்கையின் பொருளாதாரம் அபிவிருத்தி பாதையை நோக்கிப் பயணிக்க வேண்டுமாயின் கல்வியும் காலத்திற்கு ஏற்றவாறு மாற வேண்டும். உலகில் அபிவிருத்தி பாதையில் வெற்றி கண்ட நாடுகளின் பொருளாதாரம் அறிவுசார் பொருளாதாரத்தில் பயணித்ததன் விளைவால் முன்னேற்றம் கண்டது எனக்கூறுவதே மிகப்பொருத்தமானதாக இருக்கும்.உதாரணமாக சுவீடன், பின்லாந்து போன்ற நாடுகளை உதாரணமாக குறிப்பிடலாம். இதனை பின்வரும் அட்டவணையூடாக தெளிவாக விளங்க முடியு ம். 

அட்டவணை 4

KEI சுட்டெண் 2000-2012

நாடு முநுஐ சுட்டெண் 2000 முநுஐ சுட்டெண் 2007 முநுஐ சுட்டெண் 2012

பின்லாந்து 9.22 9.07 9.33

சுவீடன் 9.65 9.26 9.43

பிரான்ஸ் 8.53 8.36 8.21

ஜேர்மனி 8.84 9.22 8.90

இந்தியா 3.14 3.0 3.06

ஜப்பான் 8.81 8.46 8.28

சுவிற்சர்லாந்து 9.28 8.99 8.87

ஐக்கிய இராச்சியம் 8.89 8.8 8.76

சீனா 3.83 4.43 4.37

இஸ்ரேல் 8.80 8.16 8.14

மூலம் : KAM 2007 (www.worldbank.org)

அவ்வகையில் இலங்கையின் பொருளாதார பின்னடைவவு களால் கல்வித்துறை பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளதை வரலாறுகளின் ஊடாக அறிய முடிந்தது. உதாரணமாக 2005ம் ஆண்டில் இலங்;கையில் 13 பல்கலைக்கழகங்களில் 19 ஆராய்ச்சி நிறுவனங்களில் 5250 விஞ்ஞானிகள் காணப்பட்டதாக ஆய்வூகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏறத்தாள 25 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை செல்வாக்கு மிக்க விஞ்ஞான தொழிநுட்பத்துறைப் பட்டதாரிகளைக் கொண்டது. ஆனால் அண்மைக்காலங்களில் ஆராய்ச்சிப்பணியானது மிகக்குறைந்த சம்பளங்களை வழங்குவதோடு தொழில்ரீதியான மேல் நோக்கிய நகர்வூக்கு இடமளிக்காமையினாலும் பல பல்கலைக்கழக அறிஞர்கள் நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. இத்தகைய நிலையிலிருந்து இலங்கை விடுபட வேண்டுமாயின் விஞ்ஞானக்கலாசாரம் உருவாவதுடன் அக்கலாசாரம் புத்தாக்கத்திலும் ஆக்கத்திறன் பணியிலும் ஈடுபடுவதை அதிகரிக்க வேண்டும். இவ்வாறான நிலை ஏற்பட வேண்டுமாயின்பொருளாதாரம் அதிகரிக்கப்பட வேண்டும். பொருளாதாரத்துறையில் வெற்றியடைய வேண்டுமாயின் தற்பொழுது 9 வருடங்களாக காணப்படும் கட்டாயக்கல்வி வாழ்க்கை நீடித்தகல்வியாக மாற்றமடைய வேண்டும். கல்விதகைமைக்கு பொருத்தமான தொழில் வாய்ப்புக்கள் காணப்பட வேண்டும். கல்வித்தகைமைக்கு ஏற்ற வேதனக்கொடுப்பனவூகள் வழங்கப்படவேண்டும். உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தனியார் தொழில்துறைகளுக்கும் இடையில் தொடர்பு காணப்பட வேண்டும். அத்துடன் கல்வி முறையில் உயர் தொழிநுட்பத்துறைகள் செயற்கை தொழிநுட்பம் என்பன புகுத்தப்பட்டால் கல்வியில் புத்தாக்கம் ஏற்பட்டு பொருளாதாரத்துறையயும் வளர்ச்சியடையூம். இதற்கு இத்தகைய அனைத்து காரணிகளுடனும் சிறந்த தலைமைத்துவமுள்ள அரசியல் அவசியமாகும். அதாவது நாட்டைப்பற்றி தூரநோக்குடன் சிந்திக்கும் அரசியல் காணப்பட்ட நாடுகளே இன்று பொருளாதாரத்திலும் கல்வியிலும் உச்ச நிலையை அடைந்துள்ளது.

கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்துவதைப் போலவே பொருளாதாரத்தில் அபிவிருத்தியை நோக்கி பயணிக்க வேண்டுமாயின் பொருளாதார திட்டங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அதாவது சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்களை அதிகரிக்க வேண்டு;ம். சிறிய மற்றும் நடுத்தர அளவு நிறுவனங்களே பிற்காலத்தில் பாரிய தொழில் நிறுவனங்களாக மாற்றமடையும்.

அடுத்து தொழிலுலகை அடிப்படையாகக்கொண்ட கல்வி முறையில் மாற்றம் ஏற்பட வேண்;டும்.இதற்காக ஆங்கில மொழிபயிற்சி தொழில் மட்டத்தேர்ச்சி தகவல் தொழிநுட்பக்கல்வியின்  கல்வியின் முன்னேற்றம் ஏற்பட்டு பரீட்சை மையக்கல்வித்திட்டம் இல்லாதொழிக்கப்பட்டு மாணவர்களின் திறன்களை கண்டறியூம் கல்வி முறை மாற்றம் ஏற்படுமாயின் பொருளாதாரமும் சிறந்த முறையில் முன்னேற்றம் காணும்.இவ்வகையான கல்வி முறையே பின்லாந்தில் காணப்படுவதால் அந்நாடு கல்வியில் முதன்மை நிலையிலும் பொருளாதாரத்தில் அபிவிருத்தி நிலையை அடைந்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

இலங்கையில் பிரதானமாக ஆரம்பக்கல்வியிலும் இடைநிலைக்கல்வியிலும் கவனம் செலுத்தப்பட்டு வந்த போதும் உயர்கல்வி மீதான அக்கறை குறைவடைந்துள்ளது.இதிலிருந்து மாற்றம் ஏற்பட விஞ்ஞான கணித மற்றும் தகவல் தொழிநுட்பக் கல்விக்கான வாய்ப்புக்கள் மற்றும் விளைதிறன் மிக்க கற்பித்தல் என்பவற்றில் தராதர உள்ளீடுகளை அதிகரிக்க வேண்டும்.

உலக வங்கியின் கருத்தின்படி இலங்கையின் கல்வி முறை விளைதிறனுடையதாக மாற கல்விநிலையங்களுக்கு அதிக சுயாதீனம் வழங்கப்படுதல் வேண்டும் எனவூம் கல்வியின் மீதான அரசின் செலவு அதிகரிக்க வேண்டும் எனவும் தராதர உள்ளீடுகளுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் எனவும் மூன்றாம் நிலைக்கல்வியில் தனியார் துறையினரின் பங்கு அதிகரிக்கப்படுதல் வேண்டும் எனவும் பாடசாலைகள் தமது தராதரத்தை உயர்த்த வேண்டும் எனவு ம் குறிப்பிட்டிருந்தது.

இலங்கையின் பொருளளாதாரம் பின்னடைவில் காணப்படுவதால் அரசிற்கு அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி கல்வியை நகர்த்த தேவையான அளவூ தகவல் தொழிநுட்பக்கல்வியில் தராதரங்களை அதிகரிக்கவூம் பயன்படுத்தவு ம் இயலாத நிலை தோன்றியள்ளது. அத்துடன் ஆரம்ப இடைநிலைக் கல்வியில் பாடஏற்பாட்டை பன்முகப்படுத்தி நவீனமயமாக்க வேண்டிய தேவையூண்டு.இதற்காக ஆளுமை விருத்தி செயற்பாட்டு முறைக்கல்வி என்பவற்றிற்கு உயர் வகுப்புக்களில்(10 11) முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

அடுத்து பூகோளமயப்பட்டிருக்கும் உலகில் ஆங்கிலம் பெற்றிருக்கும்முக்கியத்துவம் காரணமாக இலங்கை அறிவூசார் பொருளாதாரத்தில் வினைத்திறனுடன் பங்குகொள்ள ஆங்கிலத்தின் முக்கியத்துவம் அதிகர்க்கப்பட வேண்டும்.

மேலும் தொழிநுட்பத்திறன்களை பயன்படுத்த மாணவருக்கும் ஆசிரியருக்கும் இடையில் குறைந்த வாய்ப்புக்களே உண்டு. 2002 குடிசன மதிப்புத் திணைக்கள ஆய்வின் படி மொத்த சனத்தொகையில் 52.6மூ இணையப்பாவனையாளர்களாக காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் உயர்கல்வி பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் உயர்கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கும் தனியார் துறையினருக்கும் இடையில் தொடர்புகள் இன்மையால் பல்கலைக்கழக கல்வி நூற்கல்வி சார்ந்ததாகவே காணப்படுகின்றது. இதனால் உயர்கல்வி பெறுவோரில் வேலையற்றோர்  வீதம் அதிகரித்தும் செல்கின்றது.

எனவே இலங்கையின் கல்வித்துறையில் மேற்கூறப்பட்ட சவால்களை வெற்றி கொள்வதன் மூலம் பொருளாதாரத்தையும் கல்வியையூம் ஒருங்கே அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்ல முடியும்.


No comments

Powered by Blogger.