அதிபர் ஒருவரிடம் எதிர்பார்க்கப்படும் தலைமைத்துவப் பண்புகள்

  • நேர முகாமைத்துவத்தை கடைப்பிடிப்பவராக இருத்தல் வேண்டும். திட்டமிடல் ஒழுங்கமைத்தல் நெறிப்படுத்தலும், கட்டுப்படுத்தலும் போன்ற முகாமைத்துவ பணிகளை ஆற்றுபவராக இருத்தல் வேண்டும். 
  • பாடசாலையின் குறிக்கோள்களையும் இலக்குகளையும் பாடசாலையை சார்ந்துள்ளவர்களிடம் தொடர்புறுத்தக்கூடியவர்களாகவு ம் இருத்தல் வேண்டும். 
  •  பாடசாலையை சமுதாயத்தில் உள்ள எல்லோரது பங்களிப்போடும் ஒத்துழைப்போடும் செயற்படும் ஒரு நிலையமாக ஆக்குபவராக இருத்தல் வேண்டும். 
  •  பெற்றௌருக்கும் சமுதாயத்திற்கும் பாடசாலை கலாசாரத்திற்கும் கூடுதலான பொறுப்பு உள்ளவராக இருக்க வேண்டும். 
  • பாடசாலை சூழலுக்கு ஏற்ற வகையில் புதிய மாற்றங்களை உள்வாங்கி முதல்நிலை முகாமையாளராக இருக்க வேண்டும். 
  •  கற்பித்தலை மேம்படுத்த பாட விதானத்தை விருத்தி செய்வதும், புதிய நிர்வாகித்தல் முறையைத் தோற்றுவித்த விருத்தி செய்தல்இ மதிப்பீட்டுப் பயிற்சிகளை வழங்குதல், ஆசிரியர் வாண்மையை விருத்தி செய்தல். 
  • சமுதாய உறவை கட்டியெழுப்புதல் போன்றவற்றில் அதிக சிறப்பாக செயல்படுபவராக இருத்தல் வேண்டும். 
  •  பாடசாலைசார் விடயங்களில் உரிய நேரத்தில் தட்துணிபுகொண்டு செயற்படுபவராகவும், ஏனையவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து நிர்வாகம் முரண்பாடுகளை முகாமை செய்பவராகவும் இருத்தல் சிறப்பானது.

No comments

Powered by Blogger.