SBPTD வேலைத்திட்டம்



SBPTD வேலைத்திட்டம் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்துப்படும் SBPTD என்பது பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் SBPTD 10 / 13 45 2019 GEMPP2019, 2000


 SBPTD தொடர்பாக படசாலையில் பேணப்பட வேண்டிய ஆவணங்கள் 

SBPTD திட்டம் 
SBPTD சம்பவ திரட்டு
 வேலைத்திட்டமொன்றுக்கான தனியான கோவை 
தவணை முன்னேற்ற அறிக்கைகள் 
வலைய அனுமதிக் கடிதங்கள்
 SBPTD தொடர்பான முன்மொழிகளுக்கு ஆசிரியர் ஓய்வூ அறையில் பேணப்படுகின்ற முன்மொழிவு பத்திரம் 


SBPTD தொடர்பாக ஆசிரியர் ஒருவரினால் பேணப்பட வேண்டிய ஆவணங்கள்


 தொழில் சம்பவ திரட்டு 
சுய மதிப்பீட்டு படிவங்கள் 
ஆசிரியர் அறிக்கை புத்தகம் 
SBPTD ஆவணங்கள் 
பேனபடுவதனால் பெற்றுக்கொள்ளும் அனுகூலங்கள்

 திட்டமிடலில் பல்வேறு அணுகுமுறைகள் 
கற்பித்தல் முறைகள் மற்றும் நுட்பங்கள்
 மாணவர்களின் பல்வேறு பட்ட கற்றல் கருத்திற்கொள்ளாமல்கற்றல்
 பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வைத் தேடல் கற்பித்தால் தொடர்பில் மாணவர்களின் துலங்கள் விடய அறிவு இற்றைப்படுத்தப்படுகின்றது. 
தேசிய மாற்றம் உலகலாவிய வகி பாகம் என்பன ஏற்படும்.
 வருடாந்த அமுலாக்க திட்டத்தில் உட்படுத்தப்படுவதன் மூலம் ஆசிரியர்களின் விளைதிறனான பங்குபற்றல் காணப்படும்.
 வேலை திட்டங்களை நேரடியாக மேற்பார்வை செய்ய முடியூம். அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியூம். 
பாடசாலை மட்டத்தில் ஆசிரியர் அபிவிருத்தி திட்டமொன்றை ஏற்பாடு செய்யூம் படிமுறைகள் ஆசிரியர்களில் அபிவிருத்தி செய்ய வேண்டிய துறைகளை இனங்கண்டு அத்துறைகளைக் கொண்டு முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் முதலில் அபிவிருத்தி செய்ய வேண்டிய விடயத்திற்கான. செயற்றிட்டமொன்றை தயாரித்தல் பாடசாலை மட்டத்தில் ஆசிரியர் அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தல் அமுலாக்க கண்காணிப்பு செய்தால் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்ளல் பின்னூட்டலொன்றை மேற்கொள்ளல் பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி திட்டம் ஒரு சுழற்சி முறையிலான திட்டமாகும். ஒரு முறை செயல் அமர்வூ ஒன்றை மாத்திரம் செய்வதால் ஆசிரியர் அபிவிருத்தி ஏற்பட்டு விடாது. இது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டிய ஓர் அம்சமாகும்.


 பாடசாலை மட்டத்தில் ஆசிய அபிவிருத்தியை மேற்கொள்ளும் வழிமுறைகள் 

விசேட செயலமர்வூகளை நடத்துதல் ஆசிரியர் குழாம் கூட்டத்தின் நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஆசிரியர் அபிவிருத்திக்கான அம்சம் ஒன்றை சேர்த்துகொள்ளல் ஆசிரியர் மாநாடு ஒன்றை நடாத்துதல் ஆசிரியர்களுக்கு புதிய தகவல்களை வழங்கும் வகையில் ஆசிரியர்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் பார்வைக்கு வைத்தல் காலத்திற்கு காலம் ஆசிரியர்கள் அறிய வேண்டிய கையேடுகள் மூலம் கற்கச் செய்தல் சிறப்பான வேலைகளை செய்து காட்டல் ஆசிரியர்களே சுயமாக கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தல் 

SBPTD திட்டம் தயாரிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள் 

திட்டம் தொழில் வாண்மை விருத்திக்கானதாக இருத்தல் வேண்டும் ஆசிரியர்கள் தமது சொந்த வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கும் ஆலோசனைகளையும் வழிகாட்டலையூம் ஒரு பகுதியாக கொண்ட செயற்றிட்டமாக அமைந்தல் பாடசாலையின் இலக்குகளையும், நோக்கங்களை அடையும் விளக்கத்தையும் திறனையும்   பெரும் தேர்ச்சிகளை வழங்குதல்

 SBPTD நிகழ்ச்சியினால் கிடைக்கும் விளைவூகள் 

பாடசாலை ரீதியாக கிடைக்கும் விளைவுகள் 

 மாணவர் வரவில் அதிகரிப்பு ஏற்படும் பாட அடைவு  மட்டம் அதிகரிக்கும் பிந்தி வரும் மாணவர்கள் இழிவளவாக்கப்படுவர் பெற்றௌர் மத்தியில் கல்வி அடைவூ பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் சமூகப் பங்களிப்பு, நம்பிக்கை கிடைக்கும்

 ஆசிரியர் சார்பாக ஏற்படும் விளைவுகள் உபகரண கையாளல் அதிகரிக்கும் பாடசாலை மாணவர் ஆசிரியர், பெற்றௌர் ஆசிரியர் வினைத்திறனான தொடர்பு ஏற்படும் ஆசிரியர் வாண்மைத்துவம் அதிகரிக்கும் பங்கு பற்றல் மனப்பாங்கு விருத்தியடையூம் முரண்பாடுகள் அற்ற ஆசிரிய ஆளணியினர் கிடைக்கும் மேலதிக நேரங்களை ஆசிரியர்கள் மாணவர்களுக்காக செலவிடும் பண்பு கிடைக்கும்

 முகாமைத்துவம் சார்பாக கிடைக்கும் விளைவூகள்

 ஆசிரியர் இடையே சுயமாக முன்வரும் பண்பு ஏற்படும் உள்ளக மேற்பார்வை விளைத்திறன் உடையதாக அமையும் நவீன கற்பித்தல் சாதனங்களை ஆசிரியர்கள் பயன்படுத்துவதில் நாட்டம் அதிகரிக்கும் கற்றல் கற்பித்தலுக்கான வளங்களை ஒருங்கிணைப்பதில் ஆசிரியர்களே பங்கு வகிப்பர் அரசினால் ஒதுக்கப்படும் வளங்களை எதிர்பாராது ஆசிரியர்களே வளங்களை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவர் இவ்வாறான பல பங்களிப்புக்களை வழங்கும் 

இவ்வேலைத்திட்டத்தை பாடசாலைகள் முறையாக நடைமுறைப்படுத்துகின்றதா என நோக்கும் போது எதிர் மறை விளைவுகளையே அதிகமாக தகுகின்றது எனலாம். கொள்கை ரீதியாக காணப்படும் அம்சங்கள் செயல்வடிவம் பெறுவது அவசியமாகும்.

No comments

Powered by Blogger.