ஆக்கத் திறன் உடையோரை இனங்காணல்

கல்விச்செயற்பாடானது கற்றலையூம் கற்பித்தலையும் அடிப்படையாகக் கொண்ட தொடர்ந்தேர்ச்சியான ஒரு கருமத் தொடர் ஆகும். கற்றல் என்பது அறிவைத் திரட்டுவதற்கு மட்டும் உரியது அல்ல. அது தனியாளுடைய வாழ்க்கையையும் அபிவிருத்தி அடையச் செய்வதாகும். கற்றல் மனிதனுடைய சகல விதமான தேவைகளுடன் தொடர்புற்று சங்கமிக்கும் ஒரு செயற்பாடு என்பதை அறியலாம். இவ்வகையில் மாஸ்லோவின் தேவை கொள்கை மறை என்பவரின் தேவைகளின் பகுப்பு என்பன இவ்வரிசையில் பிரசித்தமானவை ஆகும். மறை என்பார் தன்னுடைய பகுப்பில் 27 விதமான தேவைகளை இறங்க கண்டு அவற்றை அட்டவணை படுத்தியுள்ளார். அவர் அட்டவணைப்படுத்திய தேவைகளில் ஒன்றுதான் ஆக்கத்திறன் தேவை என்பதாகும். 











மனிதனில் இயல்பாகவே அமைந்துள்ள இந்த ஆக்கத்திறன் பற்றி ஆராய்வதும், அதனை கற்றல் செயற்பாட்டில் இணைத்து மாணவர்களுடைய ஆற்றல்களையூம், ஆளுமையையூம் எவ்வாறு மேம்பாடு அடைய செய்யலாம் என்பதையூமே இக்கட்டுரை விளக்குகின்றது. 

ஆக்கத்திறன் உடையோரின் பண்புகள் ஆக்கத்திறன் உடையவர்கள் எவ்வாறு அமைவார்கள் அவர்களின் பண்புகள் எவ்வாறு இருக்கும் அவர்களை எவ்வாறு இனங்கான்பது என்பது பற்றி கல்விச் செயற்பாட்டில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஒவ்வொருவரும் அறிந்திடல் அவசியமாகும். ஆக்கத்திறன் உடையவர்கள் பொதுவாகவே தனித்துவமுடையவர்களாக இருப்பர். இவர்கள் அபூர்வமான செயற்பாடுகள்இ விஞ்ஞான கண்டுபிடிப்புகள்இ கலை, இசை, இலக்கியம் போன்ற துறைகளில் விசித்திரமான படைப்புகளை ஆகிடும். திறமை பெற்றவர்களாகவூம் இருப்பர். இவர்களிடம் புதியன புனைவதில் ஆர்வமும், படைப்பாற்றலில் ஆசையூம் எதையூம் துருவி ஆராய்வதில் வாஞ்சையூம் காணப்படும். கல்வி போதனையிலும் கற்ற செயற்பாட்டிலும். மாணவர்களிடம் காணப்படும் ஆக்கத்திறன் செயற்பாட்டுக்குரிய பண்புகளை எவ்வாறு இனங்காணலாம் என்பதற்கான பல ஆய்வூகளையூம் வழிமுறைகளையூம் அறிஞர். உள்ளனர். ஆண்ட்ராய்டு என்னும் அறிஞர் 20 உயிரியலாளர்களையூம் 22 பௌதிக விஞ்ஞானிகளையூம், 22 உளவியலாளர்களையூம் செவ்வி கண்டு அவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளையூம் நடவடிக்கைகளையூம் நன்கு ஆராய்ந்து ஆக்கத்திறன் சார்பான சில பண்புகளை இனங்கண்டார். கெற்சாலும் ஜக்சனும் மற்றும் சுஸான் லீடன் என்னும் அறிஞரும் ஆக்கத் திறன் பெற்றுள்ள இளம் பிராயத்தினர் இடையேயூம், மாணவர்களிடையேயூம் ஆய்வூகளை மேற்கொண்டனர். இவறிஞர்கள் உடைய ஆய்வூகளின் அடிப்படையில் முக்கியமான சில ஆக்கத் திறன் பண்புகளை இனங்கண்டனர். 

ஆக்கத் திறன் பண்புகள் 

 ஆக்கத்திறன் உடையோர் குழந்தை பருவத்திலேயே உயர் நுண்மதி ஈவூ பெற்று காணப்படுவர். 

ஆக்கத்திறன் உடையோர் இடம் சுதந்திரமான உள்ள போகும் சுதந்திரமாக தொழிற்படும் தன்மையூம் காணப்படும்.

 இத்தகையோரிடம் சுயநலமான போக்கே காணப்படும். ஆக்கத்திறனுடைய மாணவர்கள் தமது வகுப்பு மாணவர்களுடன் நெருங்கிப் பழக மாட்டார்கள். பொதுவாக தனித்து இருக்கவே விரும்புவார்கள். இவர்களுடைய கருமங்கள் நெகிழ்ச்சி தன்மை உடையனவாக இருக்கும். 

கவின் கலையிலும் அழகிய கலையிலும் அதிகமாக ஈடுபடுகின்ற இவர்கள் ரசனை உணர்வு பெற்ற வர்களாகவூம் ரசிகர்களாகவூம் இருப்பார்கள்.

 தாம் தொடங்கிய செயல்களே பூர்த்தி செய்து வெற்றி காணும் வரையூம் ஓய்வு கொள்ளவே மாட்டார்கள். நீடித்த முயற்சியும் கவனத்தை ஒருமுகமாக்கி வேலையில் ஈடுபடு தன்மையும் காணப்படும். கற்றல் இவர்களிடம் வேகமாகவூம்இ இலகுவாகவும் அமையூம். 

சிறந்த ஞாபக சக்தியும் காணப்படும். மனனம் செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் துருவித் துருவி ஆராயும் சிந்தனைப் போக்கு பெரிதும் காணப்படும். 

ஏன் எதற்கு என்று ஆராயூம் தன்மை அதிகம் இருக்கும். மேல் வாரியான விடைகளைக் கொண்டு இவர்கள் திருப்தி பெற மாட்டார்கள்.

 மொழியாற்றலும் இவ்வாற்றலின் அடிப்படையில் அமைந்த விரிவான சொற்களஞ்சியமும் உடையவராய் இருப்பர். 

எந்த ஒரு விடயத்தையும் கூர்மையாக அவதானிக்கும் தன்மை இவர்களிடம் காணப்படும். எனவே இத்தகைய மாணவர்களை வகுப்பறைகளில் இனங்கண்டு கை தூக்கி விட ஆசிரியரின் கட்டாயக் கடமையாகும்.
  ஆக்கத்திறன் விருத்திக்காக வகுப்பறையில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள்

  • வகுப்பறை செயற்பாடுகளில் வினா கேட்டல் காணப்பட வேண்டும்வினாக்களை கேட்பதற்கு மாணவர்களை அனுமதிப்பதன் மூலம் மாணவர்கள் புத்துணர்ச்சி பெறுகின்றனர். சிந்தனை கிளறல். வகுப்பறைகளில் காணப்பட வேண்டும். 
  •  சிந்தனை கிளறல் முறை வகுப்பறைகளில் பயன்படுத்தப்படும் போதும். புதிய கருத்துக்களை முன்வைக்கும். ஆற்றல் மாணவர்களிடம் ஏற்படும் தேடல்களில் ஈடுபடுவார்கள். இதனால் அவர்களின் சிந்தனை விரிவாக்கப்படும். 
  •  பல்வேறு விதமான போட்டிகளையும், விழாக்களையூம் மேற்பட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். 

 இவ்வாறு வகுப்பறை செயல்பாடுகளில் ஆக்கத் திறனை விருத்தி செய்வதற்கான செயற்பாடுகள் உள்ளன என்று கொள்கை ரீதியாக காணப்பட்டாலும் அது நடைமுறை ரீதியாக காணப்பட அமைவதில்லை என்பதே கவலைக்குரிய விடயமாகும.; இலங்கையில் எல்லா பாடசாலைகளும் ஒரு பொதுவான பாடஏற்பாட்டை கொண்டுள்ளனவாகக் காணப்பட்டாலும், கல்விச் செயற்பாடுகளில் பாரிய இடைவெளிகள் காணப்படுகின்றன என்பதையும் அப்பாரிய இடைவெளிகள் மாணவர்களின் ஆக்கத்திறன் விருத்தியில் பெரிய பள்ளத்தை ஏற்படுத்தி வருகின்றன என்பதையூம் ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.

No comments

Powered by Blogger.