கற்பித்தல் பற்றிய ரூசோவின் கருத்து


கல்விச் செயற்பாட்டில் ஆசிரியர் ஒருவரின் வகிபங்கு பற்றி ரூஸோ கூறிய விடயங்கள் இன்று தவறான முறையில் கையாளப்படுகின்றன. பிள்ளை மைய கல்வி எனும் விடயம் தொடர்பாக ரூஸோ தெரிவித்த கருத்துக்கள் ஆசிரியர் தொடர்பாக ஆசிரியர் வகிக்க வேண்டிய பங்கு அவ்வளவு தூரம் இலகுவானது அல்ல என்பதும் ரூசோவின் இயற்கைவாதத்தின் ஊடாக அறிய முடிகின்றது. குழந்தை கல்வியலாளர்கள் ஆன டேஸ்ட் நல்லசி கோபர் ஆகியோரின் கருத்துக்களுடன் ரூசோவின் கருத்தை ஒப்பிட்டு கல்விச் செயற்பாட்டில் ஆசிரியரின் தலையீடு கூடுதலாக இடம்பெற கூடாது. என்ன எடுத்து காட்டுவதிலேயே பெஸ்ட்டலொசி புரோபல் போன்றவர்கள் அதிகம் ஈடுபாடு காட்டினர். ஷரூசோவின் கருத்து இதனை ஆதரிக்கவில்லை. கற்பித்தால் பற்றி ரூசோ குறிப்பிட்ட கருத்துக்கள் அவ்வளவு தூரம் எளிமையானவையுமல்ல என்பது மட்டுமன்றிஇ அவர் ஆசிரியர் மீது பெருமளவு பொறுப்புகளையூம் சுமத்தியுள்ளார். எமிலி என்னும் நூலில் ரூஸோவினால் குறிப்பிடப்பட்டிருந்த எதிர்மறை கல்வி மற்றும் கற்பித்தல் பற்றிய விளக்கம் போன்ற விடயங்களை உற்று நோக்கும் பொழுது கல்விச் செயற்பாட்டில் ஆசிரியரின் பொறுப்பு எவ்வளவு தூரம் முக்கியமானது என்பதை தௌpவாக விளங்கிக்கொள்ள முடியூம். ரூஸோவின் சிந்தனைப்படி மனிதன் இயற்கையில் நல்லவன். என்ற விடைய எதிர்மறை கல்விக்குரிய தத்துவார்த்த அடிப்படையாகும். மனிதன் பிறக்கும் பொழுது. சில விடயங்களில் குறைபாடுகள் கொண்டவன். எனினும் அவன் வளர்ந்து மனிதனாகம் பொழுது அத்தகைய குறைகளை நீக்கப்படுகிறது. அத்தியாவசியமானது. நிலத்தில் காணப்படும் இயல்புகள் சூழ செல்வாக்கினால் மாசுபடுவது என்றும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் பிள்ளைகளிடம் இயற்கையாகவே அமைந்த நல்ல பண்புகள் அவற்றுக்கேயுரிய இயல்பில் விருத்தி செய்யப்படல் வேண்டுமென ரூசோ கூறியிருந்தமை அவதானத்திற்குரியது. இயற்கையானது எமது கல்வியில் சில ஒழுங்குகளை உருவாக்கியூள்ளது. நான் அறிவூ அல்லது அறநெறி சார்ந்த கல்வியை பெறுவதற்கு முன்னர் எமது உடல் உறுப்புகள் முதிர்ச்சி பெற வேண்டும். நாம் மனிதராவதற்கு முன்னர் குழந்தைகளாக இருப்பது இயற்கையானது. ஒரு அனுபவமுள்ள ஆசிரியர் புதிய பாடம் ஒன்றினை கற்பிக்கும் பொழுதும் பிள்ளைகளின் அறிவூ மற்றும். எழுச்சி சார் ஆற்றலுக்கு அமைவாகவே அந்தப் பாடம் அமைய வேண்டும் என்பதை அவர் அறிவார். இவ்விடத்தில் ஷரூஸோ வலியுறுத்தும் இன்னொரு கருத்து. பிள்ளை ஆயத்தநிலையை அடையும் வரை அறிவுசார் கல்வியை வழங்குவதற்கு நாம் பொறுத்திருக்க வேண்டும் என்பதாகும். மேலும் பிள்ளைகளின் தொடக்க நிலைக் கல்வி அனேகமாக உடற்கல்வியுடன் தொடர்புடையது என்பதனால் அறிவு மற்றும் ஒழுக்கம் சார்ந்த கல்வியை வழங்குவதில் இயல்பாகவே காலம் தாழ்த்தப்பட வேண்டும். பிள்ளைப் பருவத்தில் அவர்கள் கூடுதலாக உடற் பயிற்சிகளில் ஈடுபடுதல் முக்கியமானது என கூறியூள்ளார். பிள்ளைகள் இடத்தில் முதலில் விருத்தியடைய வேண்டியவை. புலன்களே என்பதால் முதலில் அவ்விடத்திலேயே கவனம் செலுத்துதல் வேண்டும். எனினும் பிள்ளையை பிள்ளையாகவே கருதல் அவசியம் என அவர் வலியூறுத்துகிறார். ஒரு பிள்ளை பூரணத்துவம் பெறாத முதியவனாக வளர்வதிலும் பார்க்க சுய ஆற்றலும் வரையறைகளும் கொண்ட ஒருவனாக வளர வேண்டுமென்பதால். அறிவானது பின்னரே ஊட்டப்பட வேண்டும் என்பது அவரது நம்பிக்கையாகும். வகுப்பறையில் கட்டுப்பாட்டினை மேற்கொள்வதற்கு ஆசிரியர் நடந்து கொள்ள வேண்டிய முறை மிக முக்கியமானது. அக் கட்டுப்பாடானது மறைமுகமானதாகவூம்இ உறுதியானதாகவும் இருக்க வேண்டும் என்பது ரூசோவின் கருத்தாகும். கல்வியின் நோக்கம் நல்ல உணர்வுகளை விருத்தி செய்வதாக இருத்தல் வேண்டும். அவையே அனுபவங்களுக்கான வழியாகவூம் இருக்கும். பிள்ளைகள் சுதந்திரத்தை அனுபவிக்கும் வேளையில் அவர்களை தீயவழியில் இட்டுச் செல்லும் நடத்தைகளுக்கு ஊக்கம் அளிக்க கூடாது. இயற்கையின் வழியே அது அமைந்தால் வேண்டும்.

No comments

Powered by Blogger.